Academic Activities 2020 – 2021

Event 1:

தமிழ் இலக்கிய மன்றப் பெருவிழா - 2021

கே.எம்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைச் சார்பில் தமிழ் இலக்கிய மன்றப் பெருவிழா 30.01.2021 சனிக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் இணைய வழியாக நடைபெற்றது. இந்நிகழ்விற்குக் கல்லூரி நிர்வாகப் பெருமக்கள் முன்னிலை வகித்தனர். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர்.ஜா.ஜெயக்குமார் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர்.மு.வளர்மதி தலைமையுரையாற்றினார். தமிழ்த்துறைப் பேராசிரியர் வெ.வளர்மதி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக்கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர். மு.கல்பனா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று “வெள்ளத் தனைய மலர் நீட்டம்” என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். நிறைவாகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் மு.ராதா நன்றியுரை நல்கினார். இந்நிகழ்வினைத் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் இரா.சங்கீதா மற்றும் வே.சரளா ஆகியோர் தொகுத்து வழங்கினார். பேராசிரியர்கள் வெ.இரமேஷ் மற்றும் ரா.சே.பாலாஜி ஆகியோர் நிகழ்வினை ஒருங்கிணைப்பு செய்தனர்.

Event 2:

கே.எம்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குடியாத்தம்
தமிழ்த்துறை

திருப்பத்தூர் தொன்போஸ்கோ கல்லூரி, வேலூர் டி.கே.எம். கல்லூரி, புதுப்பாளையம் இதயா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் திருச்சி ராஜா பப்ளிகேஷன்ஸ் (பல்கலைக்கழக மானியக்குழு அங்கீகாரம் பெற்ற தமிழ் ஆய்விதழ்) இணைந்து 31.10.2020 மற்றும் 01.11.2020 இரு தினங்களில் நடத்திய ‘காலந்தோறும் தமிழ் இலக்கியங்களின் வரலாறும் புதுமைச் சிந்தனைகளும்” என்னும் பொருண்மையிலான கருத்தரங்கில் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் முனைவர்.ஜா.ஜெயக்குமார் மற்றும் வெ.வளர்மதி ஆகியோர் கட்டுரை வெளியிட்டுள்ளனர். மேலும் முனைவர்.ஜா.ஜெயக்குமார் கருத்தரங்க அமர்வின் தலைவராகவும் பங்கேற்றுள்ளார்.