Academic Activities 2019 – 2020

தமிழ் இலக்கிய மன்றப் பெருவிழா – 2019

கே.எம்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறைச் சார்பில் தமிழ் இலக்கிய மன்றப் பெருவிழா கே.எம்.ஜி. கலையரங்கில் 03.10.2019 அன்று பிற்பகல் 02.30 மணிக்கு நடைபெற்றது. இவ்விழாவில் கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் மேலாண்மை அறங்காவலர் திரு.கே.எம்.ஜி. பாலசுப்பிரமணியன், தலைவர் திரு.கே.எம்.ஜி. சுந்தரவதனம், செயலர் திரு.கே.எம்.ஜி. இராஜேந்திரன், பொருளாளர் திரு.கே.எம்.ஜி. முத்துக்குமார் ஆகியோர் குத்துவிளக்கை ஏற்றி விழாவைத் துவக்கி வைத்தனர். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ஜா.ஜெயக்குமார் அனைவரையும் வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் முனைவர் மு.வளர்மதி அவர்கள் தலைமையுரை நல்கிட, துணை முதல்வர் திரு. மு.மேகராஜன் முன்னிலை வகித்தார். கல்லூரி இயக்குநர் முனைவர் த.கஜபதி வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினர் அறிமுகத்தை திருமதி. மு.இராதா நிகழ்த்த, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் தலைப்பில் சிறப்பு விருந்தினரும் வாணியம்பாடி இசுலாமியாக் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியருமான முனைவர் கோ.வெங்கடகிருஷ்ணன் அவர்கள் தமிழர்களின் உலகளாவிய சிந்தனை,தொலைநோக்குப் பார்வை குறித்து சிறப்புரை நல்கினார். நிறைவாக செல்வி. இரா.சங்கீதா நன்றி கூறினார்.

இந்நிகழ்வினை திருமதி.வெ.வளர்மதியும், திருமதி. வே.சரளாஅவர்களும் தொகுத்து வழங்கினர். திரு.வெ.இரமேஷ் மற்றும் திரு.ரா.சே. பாலாஜி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர். இந்நிகழ்வில் பேராசிரியப் பெருமக்களும் மாணவ-மாணவியரும் பங்கேற்றனர்.