Others

கு.மா.கோவிந்தராசனார் தமிழ் இலக்கிய மன்றப் பெருவிழா

25.02.2011 – வெள்ளிக்கிழமை, காலை 10.30 மணிக்கு கு.மா.கோவிந்தராசனார் தமிழ் இலக்கிய மன்றப் பெருவிழா நடைப்பெற்றது. முதல் நிகழ்வாக இயல் அரங்கில் சிறப்பு விருந்தினராக முனைவர். தமிழருவி மணியன் கலந்துக்கொண்டு “வாழ்க்கை உங்கள் கைகளில்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இவ்விழாவினைக் கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் குத்துவிளக்கினை ஏற்றி துவக்கிவைத்தனர். கல்லூரி முதல்வர் முனைவர். த.கஜபதி அவர்கள் தலைமையுரையாற்றினார். கே.எம்.ஜி. கல்லூரிச் செயலர் அவர்கள் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தார்.

பிற்பகல், 2.30 மணிக்கு இரண்டாவது நிகழ்வாக இசை அரங்கம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பேரா.ச.செந்தில்வேலன் (தமிழ்த் துறை தலைவர், அருண் கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செங்கம்.) கலந்து கொண்டு ‘மண்ணின் மணம் வீசும் நாட்டுப் புறப் பாடல்கள்’ என்ற தலைப்பில் தம் குழுவினருடன் சமுதாயச் சிந்தனையுடைய இனிய நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி மகிழ்வித்தார்.